மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதை எப்படி நான் செய்திருக்க முடியும்!. ஊடகங்கள் மீது எரிச்சலடைந்த நடிகர் தியாகராஜன்!.
கடந்த சில தினங்களாக சில பிரபலங்கள் மீது, பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பாடகி சின்மயி செய்திகளை வெளியிட்டு வருகிறார். இதனை அடுத்து மீ டூ விவகாரத்தில் பல பிரபலங்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் 'மீ டூ' மூலம் பிரதிகா மேனன் என்ற புகைப்பட கலைஞர் நடிகர் தியாகராஜன் மீது சமீபத்தில் கூறிய கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்த சம்பவம் நடந்தது பெரம்பலூர் பக்கத்தில் உள்ள ரஞ்சன்குடி என்ற கோட்டையில். அந்தப் பெண் தவறாக கோயம்புத்தூர் பக்கத்தில் என்று கூறுகிறார். அந்த பெண் புகைப்பட கலைஞர் படப்பிடிப்பிற்கு இரண்டு நாட்கள் அப்ரண்டீஸ் ஆக வேலை செய்ய வந்தார்.
பிறகு மூன்றாம் நாள் அதிக ஜலதோஷத்தால் உடல்நலம் சரியில்லாமல் அந்தப் பெண் வேலைக்கு வரவில்லை. அவர் வீட்டிற்கு சென்று விட்டார். அதோடு அவருக்கும் எனக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் படப்பிடிப்பு நடந்த இடம் கடும் குளிரான இடம்.
அங்கு நாங்கள் படப்பிடிப்பை மதியம் 4 மணிக்கு மேல் ஆரம்பித்து அடுத்த நாள் காலை வரை படப்பிடிப்பு நடந்தது. இது இப்படி இருக்க நான் எப்படி அந்தப் பெண்ணின் அறைக்கதவை தட்டி இருக்க முடியும்.
யாரோ ஒருவர் எங்கிருந்தோ சமூக வலைத்தளத்தில் யார் மீதாவுது பாலியல் புகார் கூறினால், உடனே என்ன ஏது என்று கூட கேட்காமல் அப்படியே செய்திகளில் போட்டுவிடுகின்றனர். அது எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டவரை பாதிக்கிறது என்பதை யாரும் கண்டுகொள்வதில்லை என வேதனையுடன் கூறியுள்ளார்.