மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயகாந்தின் நினைவிடத்திற்கு செல்கிறார் நடிகர் வடிவேலு?: வெளிவந்த தகவல்.!
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர், தேமுதிக நிறுவனர் & தலைவர் கேப்டன் விஜயகாந்த், டிசம்பர் 28 அன்று காலை உடலநலக்குறைவால் தனது 71 வயதில் காலமானார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
திரையுலக நட்சத்திரங்களும், அரசியல்கட்சி பிரமுகர்களும் தங்களின் இரங்கலை நேரில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இறுதிச்சடங்குக்கு பலரும் நேரில் சென்று இருந்தனர். வெளிநாட்டில் படப்பிடிப்பால் வர இயலாமல் தவித்த நடிகர்களும், சென்னை வந்து விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று வருகின்றனர்.
திரைத்துறையில் விஜயகாந்தால் அடையாளம்பெற்ற நடிகர் வடிவேலு, அரசியல் கருத்து மோதலில் தன்னை தூக்கிவிட்டு ஏணியை எட்டி உதைத்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அதன் பின் அவரின் திரைவாழ்க்கை என்பது கடுமையான அளவு முடங்கிப்போனது.
சமீபத்தில் அவரின் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வந்த நிலையில், விஜயகாந்தின் மறைவுக்கு அவர் வரவில்லை. இதனால் பலரும் வடிவேலுவின் மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர். சமூக வலைத்தளத்திலும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் வடிவேலு விஜயகாந்தின் மறைவை அறிந்து ஒருநாள் முழுவதும் சாப்பிடவில்லை. இரங்கல் தெரிவிக்க நேரில் வந்தால் அசம்பாவிதம் நிகழும் என்பதால் நேரில் வரவில்லை. விரைவில் அவரின் நினைவிடத்திற்கு வடிவேலு வருகை புரிவார் என அவரது நண்பர் மாலின் தெரிவித்துள்ளார்.