#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரீ-ரிலீஸ் செய்யப்படும் நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம்... கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!
கடந்த 2021ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் மாஸ்டர். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்தது. படத்தின் ஓவர்சியர் உரிமையை ஹம்ஸினீ என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் கைப்பற்றி இருந்தது.
ரீ-ரிலீஸ் செய்யப்படும் மாஸ்டர்
இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் ஐரோப்பா நாட்டில் மறுவெளியீடு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெளிநாடு சென்று வர தயாராக இருக்கும் விஜய் ரசிகர்கள், அங்கு சென்றும் கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதையும் படிங்க: தளபதி விஜயுடன் இயக்குனர் வெங்கட் பிரபு; கோட் பட ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் லீக்.!
ரீ-ரிலீசில் வெற்றியடைந்த கில்லி
சமீபத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு நடிப்பில், தரணி இயக்கத்தில் உருவான திரைப்படம் வசூல் மற்றும் வரவேற்பில் இன்று வரை சாதனை பட்டியலில் பெரிய இடத்தை தக்கவைத்த படங்களில் குறிப்பிடத்தக்கது ஆகும்.
இதையும் படிங்க: இவ்வளவு கோடியா? விஜய்யின் GOAT படத்தை அதற்குள் பலகோடி கொடுத்து வாங்கிய பிரபல நிறுவனம்..