திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட்லீயுடன் மீண்டும் கைகோர்க்கும் இளைய தளபதி விஜய்?.. அசத்தலான தகவலால் ஆட்பறித்து கொண்டாடும் ரசிகர்கள்.!
ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா உட்பட பலர் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ஜவான். இந்த படம் 7 செப்டம்பர் அன்று உலகளவில் வெளியாகிறது.
ஹிந்தி மற்றும் தமிழ் மொழியில் படம் வெளியீடு செய்யப்படவுள்ள நிலையில், படத்திற்கு அனிரூத் இசையமைத்து உள்ளார். ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.
படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்நிலையில், ஜவான் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பின்னர், இயக்குனர் அட்லீ நடிகர் விஜயின் 69வது திரைப்படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இயக்குனர் அட்லீ விஜயின் 69ம் படத்திற்கான பணிகளை தொடங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், அனிரூத் இசையமைக்கலாம் என்ற தகவல் தெரியவருகிறது.
ஆனால், இவை அனைத்தும் உறுதி செய்யப்படவில்லை. நடிகர் விஜய் தற்போது தமிழக அரசியல் செயல்பாடுகளிலும் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக களமிறங்கியுள்ள நிலையில், அவர் 2026 வரையில் தேர்தலை கருத்தில் கொண்டு படத்தில் நடிக்காமல் முழுநேர பிரச்சாரத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
அதனால் திரைத்துறைக்கு தற்காலிக இடைவெளி விடலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், தற்போதைக்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கவனிக்கப்படும் நடிகர் விஜய் திரைக்கு இடைவெளி விட வாய்ப்பு இல்லை என்றும் தெரியவருகிறது.
நடிகர் விஜய் - இயக்குனர் அட்லீயின் கூட்டணியில் உருவான மெர்சல், தெறி, பிகில் ஆகிய 3 படங்களும் மெகாஹிட் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.