திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உன்னை நினைத்து படத்தில் சூர்யா கதாபாத்திரை மிஸ் செய்த மாஸ் நடிகர்! யார் தெரியுமா?
இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் உன்னை நினைத்து. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார்.
கதை, நடிப்பு, பாடல் என படத்தின் அனைத்துமே மாபெரும் வெற்றி பெற்றது. தங்கும் விடுதியில் சாதாரண இளைஞராக வேலைபார்த்து தனக்கு பிடித்த பெண்ணிற்காக அனைத்தையும் செய்வார் சூர்யா. பின்னர் அந்த பெண் அவரை ஏமாற்றிவிட்டு வேறொருவரை திருமணம் செய்துகொள்ள முயற்சிப்பதுபோல் கதை நகரும்.
அன்றைய சமயத்தில் மாபெரும் வெற்றிபெற்றது இந்த திரைப்படம். இந்நிலையில் படத்தின் நாயகி லைலா அளித்த பேட்டி ஒன்றில் உன்னை நினைத்து படம் பற்றி கூறியுள்ளார்.
உன்னை நினைத்து’ படத்துல முதலில் விஜய் சார்தான் ஹீரோவா கமிட்டாகியிருந்தார். அந்தப் படத்துக்காக ஒரு பாடலை ரெண்டுநாள் ஷூட் பண்ணாங்க. பிறகு சில பிரச்னைகளால விஜய் அந்தப் படத்துல விஜய் சார் நடிக்கல.
நான் அவர்கிட்ட, ‘உங்க ஒருத்தரோடதான் ஷூட்டிங் வரைக்கும் வந்து என்னால நடிக்க முடியாமப்போச்சு. கண்டிப்பா ஒருநாள் உங்ககூட நடிப்பேன்’னு அடிக்கடி சொல்லியிருக்கேன். அது இப்போவரை நடக்கலை. செகண்ட் இன்னிங்ஸ்ல லக் இருக்கான்னு பார்ப்போம் என்று கூறியுள்ளார் நடிகை லைலா.