53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
என்னடா இது! விஜய் மகன் சஞ்சய்க்கு இப்படி ஒரு திறமையா? வீடியோ!
தமிழ் சினிமாவின் தளபதி விஜய். நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் இன்று சர்க்கார் அமைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். என்னதான் தனது தந்தை பிரபல இயக்குனராக இருந்தாலும், தனது முயற்சியாலும், திறமையாலுமே நடிகர் விஜய் இந்த உயரத்திற்கு வளர்ந்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சஞ்சய், சாஷா என இரண்டு பிள்ளைகள் உளது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். மகன் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். மகள் சாஷா தெறி படத்தில் ஒருசில காட்சிகளில் நடித்திருந்தார்.
மகன் சஞ்சய் கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பதால், அவருக்காகவே தனி பயிற்சியாளரை வைத்து பயிற்சி கொடுத்து வந்தார் விஜய். இந்நிலையில் விஜய் மகன் சஞ்சய் இயக்கி, நடித்த ஜங்சன் என்று குறும்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது.
சஞ்சய் மிகப்பெரிய கிரிக்கெட் வீரராக வருவார் என்றும், பெரிய நடிகராக வருவார் என்றும் பேசப்பட்டது. இந்நிலையில் சஞ்சய், முதன் முறையாக நேர்காணல் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதில் தமிழில் இருமுகன், நோட்டா போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ஷங்கர் என்பவரை நேர்காணல் செய்துள்ளார் சஞ்சய். இது இவருக்குள் மேலும் இருக்கும் திறமையை வெளிப்படுத்தியுள்ளது.