மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் வசந்தின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்...
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விஜய் வசந்த். அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் வசந்த் பிரபல தொழிலதிபர் வசந்த் & கோ வின் நிறுவனர் வசந்தகுமாரின் மகன் ஆவார். வசந்த் குமார் மறைவுக்கு பிறகு விஜய் வசந்த் அரசியலில் களமிறங்கி தற்போது கன்னியாகுமரி தொகுதி எம்பி-யாக இருந்து வருகிறார். தற்போது முழு நேர அரசியலில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
விஜய் வசந்த் நித்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு ஆஹன் என்ற மகனும், திஷ்யா என்ற மகளும் உள்ளனர். தற்போது விஜய் வசந்தின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.