மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர் விக்ரம்! புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீயான் விக்ரம். தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே என்று கூறலாம். சங்கர் இயக்கத்தில் உருவான ஐ போன்ற படங்களில் தனது உடலை வருத்தி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் நடிகர் விக்ரம்.
சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் தோல்வியையே தழுவியது. இந்நிலையில் நடிகர் கமலின் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படம் ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. மேலும் கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கு வாக்களிக்க நடிகர் விக்ரம் வந்துள்ளார். நீளமான முடி, வெள்ளை தாடி என ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகர் விக்ரம். அவரை திடீரென பார்த்த ரசிகர்கள் வந்திருப்பது விக்ரம் என்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றனர். இதோ அந்த புகைப்படம்.