#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
களவாணி பட நடிகர் விமலிடம் கைவரிசையை காட்டிய திருடன்..! விமல் கொடுத்த பரபரப்பு புகார்..!
தனது விலை உயர்ந்த செல்போன் திருடுபோனதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விமல் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு, பின்னர் பசங்க, களவாணி போன்ற திரைப்படங்களின் மூலம் ஹீரோவாக மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் விமல். இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் தூங்கா நகரம், கலகலப்பு, மஞ்சப்பை வாகைசூடவா, தேசிங்கு ராஜா, மாப்ள சிங்கம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் விமல் தற்போது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 12ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாகவும், அப்போது ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்ட போது விலை உயர்ந்த செல்போனை அமர்ந்திருந்த இடத்தில் வைத்திருந்தேன், அதன்பிறகு அதனை காணவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த புகார் கானாத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கானாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில், மதுரையில் நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் 10 சவரன் நகையை திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த நபர் மதுரையில் திருடுவதற்கு முன்பாக கானாத்தூர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பதாக தெரிகிறது. இதனால், இவர் நடிகர் விமலின் செல்போனை திருடியிருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.