#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் விமல் வீட்டில் நடந்த விசேஷம்! வாவ்.. அவரோட அழகிய மகன்கள் மற்றும் மகளை பார்த்திருக்கீங்களா! கியூட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் அஜித், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வளர்த்துக் கொண்டு, பின்னர் பசங்க, களவாணி போன்ற திரைப்படங்களின் மூலம் ஹீரோவாக மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் விமல்.
இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் தூங்கா நகரம், கலகலப்பு, மஞ்சப்பை வாகைசூடவா, தேசிங்கு ராஜா, மாப்ள சிங்கம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் விமல் இறுதியாக கன்னி ராசி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நடிகர் விமல் கடந்த 2010ஆம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே இரு மகன்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் விமல் தனது மகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதனை முன்னிட்டு மனைவி மற்றும் தன் பிள்ளைகளுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.