மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மின்சாரம் தாக்கி உயிர்நீத்த ரசிகர்களின் வீட்டிற்கு நேரில் சென்ற நடிகர் யாஷ்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கடக் மாவட்டத்தை சேர்ந்த லக்ஷ்மேஷ்வர் தாலுக்கா, சாரங்கி கிராமத்தை சேர்ந்த நடிகர் யாஷின் ரசிகர்கள், யாஷின் பிறந்தநாளுக்கு கட்-அவுட் வைக்க முயற்சித்தனர்.
அப்போது, அவர்களின் மீது மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹனுமந்தப்பா ஹரிஜன் (21), முரளி நடுவினாமணி (20), நவீன் கஜ்ஜி (19) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்ந்தனர்.
மேலும், மஞ்சுநாத் ஹரிஜன், ஹனுமத் ஹரிஜன் மற்றும் பிரகாஷ் மியாகேரி ஆகியோர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர்.
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மாநில அரசு, தலா ரூ.2 இலட்சம் நிதிஉதவி வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில், நடிகர் யாஷ் பாதிக்கப்பட்ட ரசிகர்களின் வீட்டிற்கு நேரில் சென்று தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
#WATCH | Actor Yash reaches Hubballi on his way to Gadag to meet the family of his three fans who died due to electrocution while putting up birthday banners#Karnataka pic.twitter.com/ABIS5aJYBM
— ANI (@ANI) January 8, 2024
இந்த விசயத்திற்கு மனம் திறந்து பேசிய நடிகர் யாஷ், எனது பிறந்தநாள் அன்று ரசிகர்கள் யாரும் இவ்வாறான காரியத்தில் ஈடுபடக்கூடாது என்பதாலேயே நான் ஊரில் இருக்கமாட்டேன் என்று கூறி ஒதுங்கி செல்கிறேன். உங்களின் அன்பை செல்போனில் போஸ்ட் போட்டு காண்பித்தால் போதும், மனதில் நினைத்தால் போதும். கட்-அவுட் வைத்து அவற்றை வெளிப்படுத்த வேண்டாம். இனி எதிர்காலத்தில் இதனை தவிர்த்திடுங்கள்" என்று தெரிவித்தார்.