மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஜெயினுடைய அந்த பழக்கம் தான் அஞ்சலியை பிரிவதற்கு காரணம்" உண்மையை உடைத்த பிரபலம்..
2002ம் ஆண்டு "பகவதி" படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்தவர் ஜெய். தொடர்ந்து சென்னை 28, எங்கேயும் எப்போதும், சுப்ரமணியபுரம், சரோஜா, வாமனன், ராஜா ராணி போன்ற பல நல்ல படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
2007ம் ஆண்டு "கற்றது தமிழ்" படத்தில் அறிமுகமானவர் அஞ்சலி. தொடர்ந்து படங்களில் நடித்து, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அஞ்சலி, 2020ம் ஆண்டு வெளியான "பாவக்கதைகள்" வெப் சீரிஸில் ஒரு பகுதியில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாகவும், பின்னர் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இருவருமே தாங்கள் காதலிப்பதாகவோ, பிரிந்துவிட்டதாகவோ சொல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், " ஜெய்யும், அஞ்சலியும் திருவல்லிக்கேணியில் பிளாட் ஒன்றை வாங்கியிருந்தனர். காதல் முறிவுக்குப்பிறகு அஞ்சலி அந்த பிளாட்டை விற்றுவிட்டார். ஜெய்யின் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் தான் இவர்கள் காதல் முறிவுக்கு காரணம்" என்று கூறியுள்ளார்.