மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்.! இதுதான் காரணமா!
தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருக்கு என்று தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் படங்கள் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழா போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். ஆனால் தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா பாதிப்பு காரணமாக படம் வெளியாகாமல் இருந்து வருவதால் படக்குழு படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜயை இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால் அப்படத்திற்கு ஒரு வருட கால்ஷீட் வேண்டும் என்பதால் தளபதி விஜய் அப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார். மேலும் விஜய் அவர்கள் மணிரத்னத்திடம் தான் வேறு ஒரு புது வழியில் சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.