மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட! தனது 2 வயசிலேயே கணவருடன் சேர்ந்து நடித்திருக்கிறாரா? நடிகை ஆர்த்தி வெளியிட்ட அசத்தல் புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாக நடித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி இருப்பவர் நடிகை ஆர்த்தி. இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது நகைச்சுவையான நடிப்பால் ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். நடிகை ஆர்த்தி முன்னணி காமெடி நடிகரான கணேஷ்கரை, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சேர்ந்து நடித்தபோது காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் தற்போது வரை இளம் ஜோடிகளாகவே சுற்றிவருகின்றனர்.
This is #baby Aarthi and #Master ganesh first film together... God made me meet my husband at my age of 2yrs😊😍🤩 #memories #actress ...great #Srividhya Amma❤ pic.twitter.com/UHCzyucGAq
— Actress Harathi (@harathi_hahaha) July 10, 2020
ஆர்த்தி மற்றும் கணேஷ் இருவருமே ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளனர். மேலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளனர். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நடிகை ஆர்த்தி, பேபி ஆர்த்தி மற்றும் மாஸ்டர் கணேஷ் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த படம். என் இரண்டு வயதிலேயே எனது கணவரை சந்திக்கும் வாய்ப்பை கடவுள் எனக்கு கொடுத்துள்ளார் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.