மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏமாத்திட்டாங்க.. நீங்க நினைக்கிற மாதிரி இல்லை! ஆதங்கத்துடன் பிக்பாஸ் ரகசியங்களை உடைத்த நடிகை!!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த தமிழ் பிக்பாஸ் சீசன் 6 இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இதற்கிடையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளராக கலந்துகொண்டு முதல் நபராக வெளியேறியவர் நடிகை அபிநய ஸ்ரீ. இவர் விஜய், சூர்யா நடித்த பிரண்ட்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் 80, 90களில் கவர்ச்சி மற்றும் குணசித்திர வேடத்தில் நடித்து பிரபலமான அனுராதாவின் மகள் ஆவார். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அபிநயஸ்ரீ அளித்த பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சி நீங்கள் நினைப்பதுபோல் கிடையாது. ஒரு நிமிடம் கூட என்னை அவர்கள் காட்டவில்லை. எனது அம்மா பிக்பாஸ் நிகழ்ச்சி பொறுப்பாளர்களிடம் போராடியும் அவர்கள் எனது காட்சியை ஒளிபரப்பவே இல்லை. என்று கூறியுள்ளார்.
மேலும் நாமினேஷனில் நான் சேஃப் ஆனபோதும் என்னை எலிமினேட் செய்தனர். தங்களுக்கு வேண்டியவர்களை காப்பாற்றிவிட்டு மற்றவர்களை எலிமினேட் செய்வதுதான் நிகழ்ச்சியின் உண்மையான சொரூபம். அப்படி செய்ய ரசிகர்களை ஏன் ஓட்டு போட வைக்கிறீர்கள் என நாங்கள் அவர்களிடம் சண்டை போட்டோம் எனவும் ஆதங்கத்துடன் அவர் தெரிவித்துள்ளார்.