மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடிரென்று திருமணம் செய்து கொண்ட அபிராமி.!? யாரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க ??
தென்னிந்திய மாடலான அபிராமி வெங்கடாசலம் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவர். இவர் ஆரம்ப காலங்களில் சன் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில வலைத் தொடர்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அதன் பிறகு தமிழ் திரையுலகின் மூத்த நடிகரான சத்யராஜ் நடித்து ஆனந்தி அவர்கள் இயக்கிய 'நோட்டா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின் தெலுங்கு மொழியில் 'கலாவு' என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அஜித் கதாநாயகனாக நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் திரையுலகில் பிரபலமானார்.
அந்த படத்தில் அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
தொடர்ச்சியாக இரு துருவம் என்ற வலைத்தொடரில் நந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான 'துருவ நட்சத்திரம்' என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். மேலும் தமிழில் சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு காதல் கிசுகிசுவால் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலமடைந்தவர் அபிராமி வெங்கடாசலம் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இவர் கழுத்தில் மஞ்சள் கயிற்றைப் பார்த்து இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த புகைப்படம் வைரலாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.