#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை அதிதி சங்கர்... யார் அவர், எந்த படத்தில் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் கார்த்திக் ஜோடியாக விருமன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி சங்கர்.முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து விளம்பர நிகழ்வுகள் சிலவற்றில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் அதிதி.
இந்நிலையில் தற்போது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புறநானூறு திரைப்படத்தில் அதிதி ஷங்கர் நடிக்கப்போகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வர்மா நடிக்கிறார்கள். மேலும் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது அதிதி சங்கரும் இப்படத்தில் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்துள்ளது.