"விக்ரமுடன் லிப் லாக் காட்சிகள் நடிக்கவே பிடிக்கல, கஷ்டப்பட்டு நடித்தேன்" நடிகை ஐஸ்வர்யா பேட்டி..



Actress aiswarya interview

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா. இவர் நடிகை லட்சுமியின் மகள் 1989 ஆம் வருடம் தெலுங்கு மொழியில் வெளியாகிய 'அடவிலோ அபிமன்யு' திரைப்படத்தின் மூலமாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார்.

aiswarya

இதன்பின் தமிழில் பாக்கியராஜ் கதாநாயகனாக நடித்த 'ராசுக்குட்டி' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் தொழிலாளி, தையல்காரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் ஐஸ்வர்யா நடிகர் விக்ரமுடன் 'மீரா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த.படபிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை குறித்து பேட்டியில் பேசி இருக்கிறார்.

aiswarya

மீரா திரைப்படத்தின் ஒரு காட்சியில் தண்ணீருக்குள் விக்ரமுடன்  முத்தம் கொடுக்க வேண்டும்.இந்த காட்சியில் நடிப்பதற்கு எனக்கு பிடிக்கவே இல்லை. அந்த தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டு தான் அந்த காட்சியை நடித்துக் கொடுத்தேன் என்று பேட்டியில் கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.