மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் பிக் பாஸ் சீசன் 8.. மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!
தமிழ் தொலைக்காட்சிகளில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தற்போது ஏழு சீசன்களை நிறைவு செய்து, எட்டாவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தன.
இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 7 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல் ஹாசன், தனது எதிர்கால செயல்பாடுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, பிக் பாஸ் நிகழ்ச்சியை இனி தொகுத்து வழங்க இயலாது என அறிவித்து இருந்தார்.
Vandhaachu Pudhu Bigg Boss 😉 #VJStheBBhost @VijaySethuOffl 😍 #BiggBossTamilSeason8 #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision @disneyplusHSTam #VijayTV pic.twitter.com/VZxKnYUYI2
— Vijay Television (@vijaytelevision) September 4, 2024
இதையும் படிங்க: Bakiyalakshmi Promo: மறைந்த ராமமூர்த்தியின் இறுதிப்பயணம்; கொள்ளி வைக்க முடியாத பாவியான கோபி; மகளான பாக்கியா..!
இதனால் விரைவில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலத்தை தேர்வு செய்ய வேண்டிய இடத்தில் விஜய் டிவி நிர்வாகம் இருந்த நிலையில், தற்போது நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேசி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ப்ரோமோ விடியோவும் விஜய் சேதுபதியின் அசத்தல் காட்சிகளுடன் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கருத்தியல் பேச்சுக்களால் மக்களை ஈர்த்த கமலைப்போல விஜய் சேதுபதி செயல்படுவாரா? அல்லது அவருக்கென தனிப்பட்ட அம்சத்துடன் செயல்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள நிலையில், பலரும் அதனை பாராட்டி கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Siragadikka Aasai: விஜயாவுக்கு அடுத்த ஆப்பு ரெடி; செக் வைத்த முத்து & ரவி.! அசத்தல் ப்ரோமா.!!