#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னா மனுஷன் யா.. கட்-அவுட் அடிக்காமல் 1000 பேரின் பசியை போக்கிய த.வெ.க நிர்வாகிகள்.. குவியும் பாராட்டுக்கள்.!
ஏ.ஜி.எஸ் என்டர்டைன்மெட் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தி கோட். இப்படத்தில் நடிகர்கள் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, யோகிபாபு, மோகன், ஜெயராம், லைலா, சினேகா, வைபவ், பிரேம்ஜி, ஜெயராம், விடிவி கணேஷ், பார்வதி நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
படத்தின் வெளியீடை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் நேற்று இரவு முதலாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். திரையரங்குகள் பலவும் விழாக்கோலம் பூண்டு இருந்தது. பல இடங்களில் விஜயின் பிரம்மாண்ட கட்-அவுட் வைத்து பாலபிஷேகம் போன்றவை நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க, ஆட்டமாடி படத்தின் வெளியீடை ரசிகர்கள் கொண்டாடி இருந்தனர்.
இதையும் படிங்க: 16 வயது மகளை தாய்மாமனுக்கு திருமணம் செய்ய வைக்க ஏற்பாடு; இரயில் முன் பாய்ந்து உயிரைவிட்ட சிறுமி.!
அன்னதானம்
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தவெக கழக நிர்வாகிகள் சார்பில், படத்தின் வெளியீடை முன்னிட்டு 1000 பேருக்கு பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. தங்களது கட்சியின் தலைவர் அறிவுரைப்படி, கட்-அவுட் வைத்து வீண் செலவு செய்யாமல், எங்களால் இயன்ற உதவியை செய்ததாகவும் நிர்வாகிகள் பெருமிதம் அடைந்தனர். அன்னதானம் வழங்கிய நிர்வாகிகளுக்கு பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகளை சீரழித்த மருத்துவர்; முறுக்கிக்கொண்டு செய்தியாளர்கள் மீது பாய்ச்சல்.!