ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பிரபல நடிகை... அதிகாரப்பூர்வ அறிவிப்பால், கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!
இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட், ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
உட்தா பஞ்சாப், கல்லி பாய், டியர் ஜிந்தகி உட்பட பல இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆலியா பட். இவர் கங்குபாய் கத்யாவாடி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சஞ்சய லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியான கங்குபாய் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
கங்குபாய் திரைப்படம் 1960 ஆம் வருடத்தில் மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் வாழ்ந்து வந்த கங்குபாய் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது ஆகும். ராஜமௌலி இயக்கத்தில் வரும் 25 ஆம் தேதி வெளியாகும் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் ஆலியா பட் நடித்துள்ளது, அவரின் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஆலியா பட் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒண்டர் வுமன் திரைப்பட நாயகி கல் கடோட் மற்றும் ஜேமி டோர்ணனுடன் இணைந்து ஆலியா நடிக்க இருப்பதாகவும், நெட்பிளிக்ஸ் ஒரிஜினலில் உருவாகும் படத்தை, இயக்குனர் டாம் ஹார்பர் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹார்ட் ஆப் ஸ்டோன் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.