#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடடே..இந்த குழந்தை நட்சத்திரம் இவ்வளவு பெரிய பிரபலமா.? ஆச்சரியத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள்.!
கோலிவுட் திரையுலகில் குழந்தையிலிருந்து சினிமா நட்சத்திரமாக நடித்து தற்போது வரை பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகை அம்பிகாவும் குழந்தையிலிருந்து நடித்து இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.
80களின் ஆரம்பங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்த அம்பிகா, தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் இவரது தங்கை ராதிகாவும் பிரபல நடிகையாகும்.
காதல் பரிசு, எங்கேயோ கேட்ட குரல், அண்ணா நகர் முதல் தெரு, இதய கோவில் போன்ற திரைப்படங்களில் அம்பிகாவும், இவரது தங்கை ராதாவும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். மேலும் நடிகை அம்பிகா குணசித்திர கதாபாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில், சமீபத்தில் நடிகை அம்பிகாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் என்று தெரியப்படுகிறது.