IMD கடும் எச்சரிக்கை.. குழந்தைகள் (ம) முதியோர்கள் உஷாரா இருக்கணும்.!



warning for weak peoples in summer

தமிழகத்தில் அடுத்து வரும் 3 முதல் 4 நாட்களுக்கு கடுமையான வெயில் தாக்கம் இருக்கக்கூடும் என்று ஐ எம் டி எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னமும் கோடை காலமே துவங்கவில்லை.

ஆனால், அதற்கு முன்பே அதிக வெப்பம் பதிவாகி வருகின்றது என்று ஐ எம் டி தெரிவித்து இருக்கிறது. கடந்த 124 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருட பிப்ரவரி மாதத்தில் வெப்பம் பதிவாகி இருக்கிறது.

sun

அதிலும், இயல்பை விட 4 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை கேரள மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல் வரும் காலங்களில் வெப்ப அலை ஏற்படும். 

இதையும் படிங்க: வடை, பஜ்ஜியை இப்படி கொடுத்ததால் கடைகளுக்கு அபராதம்.! உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி.!

வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவிற்கு உச்சத்தில் இருக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்த நாட்களில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: அரசனை நம்பி புருஷனை கைவிட்ட பெண்.. கள்ளகாதலனால் ஏற்பட்ட விபரீதம்.!