ஒவ்வொரு மாதமும் ₹.3000 உதவித்தொகை.. தேர்தலுக்காக திமுக போட்ட பலே திட்டம்.!

தமிழக அரசு, ஒவ்வொரு மாதமும் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாயை பெண்களுக்கு கொடுத்து வருகின்றது. இது மட்டுமல்லாமல் கல்லூரி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அத்துடன் தமிழ் புதல்வன் என்ற திட்டத்தின் கீழ் மாதம் ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இப்போது இருந்தே தமிழக அரசியல் கட்சிகள் யாவும் அதற்காக வியூகம் வகுக்க துவங்கியுள்ளது. அந்த வகையில், திமுகவும் தனது வெற்றிக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றதாம்.
அதாவது மேலே குறிப்பிட்டுள்ள மூன்று திட்டங்களின் கீழ் பயன்பெறும் ஒவ்வொரு குடும்பமும் மாதாமாதம் 3000 ரூபாய் உதவித்தொகையை பெறுகிறது. எனவே திமுக அரசு தேர்தல் பரப்புரையின் போது குடும்பத்திற்கு 3000 உதவித்தொகை வழங்கக்கூடிய அரசு என்று பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கே கண்டிஷன் போட்ட காளியம்மாள்.. டீல் ஓகே ஆச்சா? இல்லையா.?!
இதையும் படிங்க: #Breaking: தோல்வியடைந்த திமுக.. அன்பில் மகேஷுக்கு அமைச்சர் பொறுப்பு தேவையா? - அண்ணாமலை காட்டம்.!