மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
'நான் காதலிப்பதாக யாரிடமும் கூறவில்லை' - காதல் குறித்து மனம்திறந்த நடிகை அஞ்சலி.!
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் உட்பட பலமொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை அஞ்சலி, எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் தன்னுடன் நடித்த ஜெயுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கள் எழுந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்த நிலையில், சில ஆண்டுகள் திரைத்துறையில் படங்கள் நடிக்காமல் இருந்த அஞ்சலி, பேரன்பு, லிசா, நாடோடிகள் 2 போன்ற திரைப்படத்தில் நடித்தார். அவருக்கு எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் கிடைக்காமல், காதலும் கைகூடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள அஞ்சலி, "நான் காதலிக்கிறேன் என யாரிடமும் தெரிவித்தது இல்லை. சினிமாவில் பல நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் சிலர் அப்படித்தான் எழுதுவார்கள். அதைப்பற்றி நான் யோசிப்பது இல்லை. நான் ஒரு விஷயத்தை செய்தால் தான் அதை பற்றி கவலைப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.