மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. சூப்பர்! கியூட்டான உடையில் அரபிக்குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட கொடி படநடிகை! லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தளபதியாக கொடிகட்டி பறக்கும் விஜய் நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
பீஸ்ட் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல் செம்ம ஹிட்டாகி பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
மேலும் அந்த பாடல்களுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் கொடி பட நடிகை அனுபமா பரமேஸ்வரன் கியூட்டான கேரளா புடவையில் பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.