திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புதிய படத்திற்காக உடலை வருத்தும் நடிகை அனுஷ்கா: இன்னொரு ரவுண்டுக்கு ரெடியாகிறாரா..!
மாதவனுடன் ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா, இதுவரை ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என தமிழின் முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு வெளியான ‘சூப்பர்’ படத்தில் நாகர்ஜுனுடன் இணைந்து நடித்த அனுஷ்கா, தமிழில் மாதவன் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ரெண்டு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு திரையுலகில் அனுஷ்காவிற்கு நல்ல மார்க்கெட் உருவானது.
ஆரம்பம் முதலே கவர்ச்சியான நடிப்பில் ரசிகர்களை கிறங்கடித்து வந்த அனுஷ்கா, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான அருந்ததி திரைப்படம், பெரும் வரவேற்ப்பை பெற்றதுடன் மெகா வசூல் சாதனை படைத்தது. பிரபாஸுடன், அனுஷ்கா இணைந்து நடித்த் அவர்களது நடிப்பில் வெளியான மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து அசத்தின.
தமிழில் வேட்டைக்காரன், லிங்கா, சிங்கம், என்னை அறிந்தால், என டாப் ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தார் அனுஷ்கா. கேரக்டர்களுக்காக உடல் எடையை கூட்டி குறைத்து நடிப்பதில் நடிகர்கள் மட்டுமே ஆர்வம் காட்டி வந்த நிலையில்., தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ’ என்ற பெயரிலும், தமிழில் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில், வெயிட் போட்டு, பப்ளியாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நிலையில், மகேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ள அனுஷ்கா, மீண்டும் 20 கிலோ வரை வெயிட்டை அதிகரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கதையின் தேவைக்காக அனுஷ்கா மீண்டும் அவரது எடையை கூட்டவுள்ளது, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்டாக அமைந்துள்ளது.