திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
என்ன இப்படி ஆகிட்டாரே.! சிவராத்திரி வழிபாட்டில் நடிகை அனுஷ்கா.! வைரலான வீடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழில் ரெண்டு என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா. பின்னர் அவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தார். மேலும் அனுஷ்கா அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி என சரித்திர, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் ஹீரோக்களையே மிஞ்சுமளவிற்கு மிகவும் அசத்தலாக நடித்திருந்தார்.
அவர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்த பாகுபலி திரைப்படம் உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ள அவர் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை ஏற்றினார். ஆனால் அவரால் அதனை குறைக்க முடியவில்லை. பல முயற்சிகள் மேற்கொண்டும் பெரியளவில் எந்த மாற்றமும் இல்லை.
இந்நிலையில் அவர் கடந்த ஒரு சில தினத்திற்கு முன்பு மகா சிவராத்திரியை முன்னிட்டு பெங்களூருவில் உள்ள சிவன் கோயிலில் தனது குடும்பத்துடன் வழிபாடு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதனை கண்ட ரசிகர்கள் அனுஷ்கா நன்கு உடல் எடை அதிகரித்துள்ளது போல இருக்காரே என கூறி வருகின்றனர்.
#AnushkaShetty celebrating Maha Shivaratri with her family in Bangalore🙏🤍.@MsAnushkaShetty ,@guna_trueblue ,@Poori5678pic.twitter.com/U1uHO8eTUp
— Anushka Shetty ❤ (@Sweetyfans_ARMY) February 19, 2023