53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஆப்பிள் நிறுவனத்தின் மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த நடிகை ஆத்மீகா; காரணம் இதுதானாம்.!
கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் மீசைய முறுக்கு.
படத்தில் அறிமுகமான கதாநாயகி ஆத்மிகா நடித்திருந்தார். கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட இவர் தனது சொந்த முயற்சியால் திரைத்துறையில் நுழைந்து பிரபலமானார்.
இந்த படத்திற்கு பின்னர் நரகாசுரன் என்ற படத்தில் அவர் நடித்த வந்த நிலையில், படம் சில காரணங்களால் வெளியாகாமல் போனது.
இதனிடையே விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் அவர் நடித்து சுமாரான வரவேற்பு கிடைத்த நிலையில், உதயநிதியின் கண்ணை நம்பாதே பாடத்திலும் நடித்திருந்தார்.
இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில், ஆத்மிகா ஆப்பிள் நிறுவனம் மீது புகார் அளித்து இருக்கிறார்.
அதாவது இ.எம்.ஐ சந்தா செலுத்திய பின், அது வேண்டாம் என முடிவெடுத்து ஆட்டோ பே ஆப்ஷனை நீக்கிய பின்னரும், அவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூபாய் ஐந்தாயிரம் எடுக்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.