மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாரின் வழியை பின்பற்றும் நடிகை ஆத்மிகா
2017ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் ஆதி நடிப்பில் வெளியான திரைப்படம் "மீசைய முறுக்கு". படத்தில் ஆதிக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. இதை தொடர்ந்து அவர் காட்டேரி, நரகாசூரன், திருவின் குரல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக "கண்ணை நம்பாதே" படத்தில் நடித்தார். இந்நிலையில், ஆத்மிகா இமயமலைக்குச் சென்று அங்குள்ள பாபாஜி குகையில் தியானம் செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி ஆத்மிகா, "எனக்கு பாபாஜி குகைக்குச் செல்ல தெய்வீக அழைப்பு வந்தது. இது ஒரு ஆன்மாவின் அழைப்பு. எனக்கு அழைப்பு வந்தவுடன் யோசிக்காமல் உடனே கிளம்பிவிட்டேன். நல்ல விஷயங்கள் எல்லாம் உடனே கிடைத்து விடாது.
இந்தப் பயணம் கடினமானதாகவும், மரணத்தை எதிர்கொள்ளும்படியாகவும் இருந்தது. என் வாழ்வில் இதற்கு முன்பு இப்படி ஒரு தெய்வீக அனுபவத்தை உணர்ந்ததில்லை. இப்போது என் வாழ்க்கை குறித்த பார்வை மாறிவிட்டது" என்று ஆத்மிகா கூறியுள்ளார். ரஜினியை தொடர்ந்து ஆத்மிகாவும் இமயமலைக்கு ஆன்மீக பயணத்திற்காக செஞ்சிருப்பது இணையத்தில் பேசி பொருளாகி வருகிறது.