மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கே".. ஆத்மீகாவை பார்த்து ஆத்மார்த்தமாக ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!
கோலிவுட் சினிமாவில் "மீசைய முறுக்கு" திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இப்படத்தில் திறமையாக நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மனதில் ஆத்மிகா நீங்கா இடம்பிடித்தார். இதன் பின்னர் இவர் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார்.
மேலும் காட்டேரி, கண்ணை நம்பாதே மற்றும் நரகாசுரன் போன்ற பல படங்களிலும் நடிக்க ஆத்மீகா ஒப்பந்தமாகி இருக்கிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவார்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை இதுவரையிலும் 2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வரும் நிலையில், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது ஆத்மிகா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. மேலும் அவர் புகைப்படத்தின் கீழ், "பார்த்துக்கலாம்" என்று எழுதியிருந்ததை கண்ட ரசிகர்கள், "இதைப் பார்த்தால் பார்த்துட்டே இருக்கலாமே" என்று இரட்டை அர்த்தத்தில் கமெண்ட்களை செய்து வருகின்றனர்.