திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திருமணத்திற்கு பின் சற்று குண்டா, அழகா மாறிய நடிகை பாவனா! புகைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன இவர் தல அஜித் உட்பட பல்வேறு தமிழ் பிரபலங்களுடன் நடித்துவிட்டார். ஜெயம் ரவியுடன் நடித்த தீபாவளி திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கிய திரைப்படம் என்றே கூறலாம்.
மேலும் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான ஆர்யா திரைப்படத்தில் வில்லியாகவும் நடித்து தனது நடிப்பு திறமையை காட்டியிருந்தார் நடிகர் பாவனா. அதன்பின்னார் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவந்தார் பாவனா.
இந்நிலையில் தயாரிப்பாளர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தின் மலையாள ரீமேக்கில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் லெஹங்கா மாடல் டிரஸ்ஸிலும், சிவப்பு புடவையிலும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு பாவனா சற்று எடை கூடியதுபோல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.