மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டாவது திருமணம் செய்கிறாரா NINI சீரியல் நடிகை? மாப்பிள்ளை யார் தெரியுமா?? வைரல் புகைப்படம்!!
நாம் இருவர் நமக்கு இருவர் 2 பிரபல சீரியல் நடிகை தீபா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவு பெற்ற தொடர்தான் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த தொடர் இரு பாகங்களாக ஒளிபரப்பாகி வந்தது.
இதில் நாம் இருவர் நமக்கு இருவர் 2வில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மத்தியிலும் பெரும் அளவில் பிரபலமானவர் நடிகை தீபா. அவர் பல பிரபல தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.
அவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளநிலையில் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை தீபா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறார் என தகவல் பரவி வருகிறது. அதாவது அவர் சாய் கணேஷ் பாபு என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.