மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிவிக்கு பின்னால் நடக்கும் சித்ரவதை.. நடிகை தீபா ஆதங்கம்!
சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை தீபா. இதனைத் தொடர்ந்து இவர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து தற்போது இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் என கூறலாம். இதனிடையே ஒரு சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தீபா கூறும்போது, டிவியில குழந்தைகள் டான்ஸ் ஆடுறாங்க, பாட்டு பாடுறாங்க. நான் ஆனால் அந்த தாய்மார்கள் குழந்தைகளை சித்திரவதை செய்கிறார்கள். இதனால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கும்.
என் குழந்தை உலகத்திலேயே பெரிய ஆளாவான். இயற்கையிலேயே குழந்தைகளுக்கு பாடக்கூடிய திறமை இருந்தால் யாரும் மறைக்க எப்படி இருந்தாலும் அது வெளியே வந்துவிடும். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் குழந்தை என்பது உங்கள் கையில் இருக்கும் குரங்கு பொம்மை அல்ல. எல்லாம் நீங்கள் சொல்வது போல் ஆடுவதற்கு என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.