மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது புது டுவிஸ்ட்டா இருக்கே.. தோழியின் முன்னாள் கணவரை திருமணம் செய்யும் ஹன்சிகா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் நடிகர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் ஹன்சிகா. இதனை தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். அதோடு சிம்புவோடு காதல், பிரேக் அப் என ஹன்சிகாவின் பர்சனல் லைஃப் போல, சினிமா வாழ்க்கையும் பாதிக்கதொடங்கியது.
இதன் பின்பு சினிமாவிற்கு இடைவெளி விட்ட ஹன்சிகா, தற்போது சில படங்களில் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சுஹேல் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் யார் சுஹேல்?, எப்போது திருமணம் என்ற பல கேள்விகளை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் சுஹேல் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், அவர் ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்று தெரியவந்துள்ளது. அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளாராம். இதன் மூலம் ஹன்சிகாவை சுஹேல் இரண்டாம் திருமணம் செய்கிறார் என தெரியவருவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.