நடிகை இந்துஜாவா இது... உடல் எடை குறைந்து ஒல்லியா மாறிட்டாரே... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!



Actress Indhujas latest photo viral

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவ் அவர்களுக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் நடிகை பிரியாவை விட அதிகம் பேசப்பட்டவர் நடிகை இந்துஜாதான்.

மேயாதமான் படத்தை தொடர்ந்து பூமராங், மெர்குரி, பில்லா பாண்டி, மகாமுனி, பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தனுஷ் - செல்வராகவன் கூட்டணி சேரும் நானே வருவேன் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் ஆண்டனியின் காக்கி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்துஜா அதிகம் அளவு உடல் எடையை குறைத்து சற்று ஒல்லியாக மாறி இருக்கிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை இந்துஜாவா இது என ஆச்சர்ய பட்டு வருகின்றனர்.