#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சரக்கடிக்க கற்றுகொடுக்கும் பிரபல நடிகை! பாட்டிலும் கையுமாக வெளியிட்ட புகைப்படத்தால் விளாசி தள்ளும் ரசிகர்கள்!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு பிறகு பாலிவுட் உலகில் போதைப்பொருள் புழக்கம் பெருமளவில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், போலிசார் மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல பிரபலங்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையும், மாடலுமான இஷா குப்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மது அருந்தும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இஷா குப்தா சமூக வலைத்தளங்களில் மிகவும் கடினமான யோகாகளை செய்து அதனை சொல்லி கொடுத்து நல்வழிப்படுத்தி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் தான் மது அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டு, ஜானி வாக்கர் எனும் மதுவை எப்படி குடிக்க வேண்டும். என்ன கலந்து குடித்தால் மகிழ்ச்சியடையலாம் என குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உங்களை பின்தொடரும் இளைஞர்களுக்கு இதைதான் கற்றுகொடுக்கிறீர்களா? என கொந்தளித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.