திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்! புகைப்படம்!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேரு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவி அங்கேயும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார்.
கடந்த வருடம் துபையில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்ற ஸ்ரீதேவி குளியலறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இருவரும் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூர் கடந்த வருடம் 'தடக்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜான்வி கபூர் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதில் உச்ச கட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். இதனை பார்த்து நெட்டிசன்கள் பலர், பட வாய்ப்பு பெறுவதற்காக ஜான்வி இந்த முறையை கையாள தொடங்கிவிட்டாரா? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி விமர்சித்து வருகிறார்கள்.