53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அட அட.. திருமணக் கோலத்தில் தேவதையாய் ஜொலிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை! குவியும் லைக்ஸ்கள்!!
வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அளவிற்கு சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிளை தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பிரபலமானவர் ஜனனி அசோக்குமார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு மருமகளாக நடித்து வந்தார்.
ஒரு சில காரணங்களால் பாதியிலேயே அந்தத் தொடரிலிருந்து விலகிய ஜனனி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அமோக வரவேற்ப்பை பெற்று வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் திமிரான தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது திருமணக்கோலத்தில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.