மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீரியலே பண்ணியிருக்கலாம்.. விக்ரம் படத்தால் நொந்துபோன பிக்பாஸ் நடிகை.! கூறியுள்ளதை பார்த்தீர்களா!!
தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் முக்கிய கவுரவ தோற்றத்தில் சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.
மேலும் விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சீரியல் நடிகைகள் மைனா நந்தினி, சிவானி, மகேஸ்வரி ஆகியோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான
காஜல் பசுபதி டுவிட்டர் பக்கத்தில், 'சீரியல் நடிகைகள் மூன்று பேருமே கமல் சார் படத்தில், அதுவும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக.. சூப்பர் ஜி சூப்பர். இதுக்கு நாங்களும் சீரியலே பண்ணி இருக்கலாம் போல' என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.