திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரியா?.. இளம் நடிகைகள் இந்த தவற மட்டும் செஞ்சிடாதீங்க - நடிகையின் அல்டிமேட் அட்வைஸ்.!
மின்சார கனவு திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமாகி, பின் இந்தி திரை உலகில் கால் பதித்து மிகப் பெரிய நடிகையானவர் கஜோல். இவர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து பின் திரையுலகுக்கு இடைவெளி விட்டார்.
தமிழில் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடித்து, தற்போது வெப் தொடர்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். சினிமா அனுபவம் குறித்து தற்போது நடிகை கஜோல் அளித்துள்ள பேட்டியில், இளம் நாயகிகளின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
அவர் கூறுகையில், "நாயகிகள் அழகுக்காக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொள்ள கூடாது. கடவுள் ஒவ்வொருவரையும் பிரத்தியேகமாக படைத்திருக்கிறார். அந்த உருவத்தை மாற்றி செய்யும் முயற்சிகள் வீணானது.
நான் திரைத்துறைக்கு நடிக்க வந்த புதிதில் எனது உடல்வாகு, நிறம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தன. அதற்காக வருத்தப்பட்டது இல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது குறித்து யோசனை செய்ததும் இல்லை. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, நடிப்பில் திறமையை வெளிப்படுத்தினேன்.
அதனால் முன்னணி கதாநாயகியாகவும் வளர்ந்து வந்தேன். இன்றைய தலைமுறை கதாநாயகிகள் அழகைவிட திறமையை நம்பினால் கட்டாயம் அவர்களுக்கான முன்னேற்றம் கிடைக்கும். கடவுள் நமக்கு கொடுத்த அழகு பிரத்தியேகமானது. பிறர் கூறுவார்கள் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்யக்கூடாது" என்று தெரிவித்தார்.