ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
நடிகர் சல்மான்கானின் அசத்தல் யோசனை; 14 ஆண்டுகள் தவித்த நடிகை தாயான நெகிழ்ச்சி.!
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் காஷ்மீரா ஷா. இவர் திருமணம் செய்து கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் ,14 முறை தாயாக முயற்சித்து தோல்வி அடைந்து இருக்கிறார்.
இதனால் மனதளவில் மிகுந்த வருத்தத்தில் இருந்த அவர், அவ்வப்போது தன்னை சந்திக்க வரும் நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பின் போது நலம் விசாரிக்கும் நெருங்கிய நண்பர்களான நடிகர்களிடம் தனது நிலை குறித்து கவலைப்பட்டு உள்ளார்.
அப்படி ஒருமுறை நடிகர் சல்மான் கானுடன் பேசியபோது, அவர் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தவே, இதன் மூலமாக அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இந்த விஷயம் குறித்து அவர் சமீபத்தில் பேட்டி அளிக்கும்போது கூறினார்.