மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த கமல் இவருதான்! நடிகை கஸ்தூரியின் வலையில் சிக்கும் பிரபல தமிழ் நடிகர்!
முன்னாள் தமிழ் சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் தனது மனதில் பட்ட கருத்துக்களை ஒளிவு மறைவின்றி பேசி வருபவர்.
மேலும் அவர் டிவிட்டரில் சமூகம், சினிமா, அரசியல் சார்ந்த பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்.
அரசியல், சினிமா, சமுதாயம் என பலதரப்பட்ட கருத்துக்களை தைரியமாக பேசுவதில் இவர் மிகவும் தைரியசாலி. இதனால் பலசமயங்களில் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு.
இந்நிலையில் நேற்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் “வட சென்னை” டீஸர் வெளியானது. இந்த டீசரை பார்த்துவிட்டு அடுத்த கமல் தனுசேதான் என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
வடசென்னை டீஸர் பாத்துட்டேன். அடுத்த கமல் தனுஷ் தான் தனுஷேதான் ! #VadaChennaiTeaser @VetriMaaran @dhanushkraja @LycaProductions @aditi1231
— Kasturi Shankar (@KasthuriShankar) July 28, 2018