திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை குஷ்பூ மதம் மாறிவிட்டாரா.. வெளியான புகைப்படத்தால் பரபரப்பு.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார் குஷ்பூ.
நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து அந்த காலத்திலேயே குஷ்புவிற்கென்று ரசிகர்களால் தனி கோவில் கட்டப்பட்டது. இதன்படி நடிப்பின் உச்சத்தில் இருக்கும்போதே சுந்தர்சியை காதலித்து 2000ஆம் வருடத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து தற்போது அரசியலில் களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கும் குஷ்பூ தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இது போன்ற நிலையில், தற்போது குஷ்பூ மசூதிக்கு சென்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகிறார். மசூதியில் இருந்து குஷ்பூ எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி குஷ்பூ மதம் மாறிவிட்டாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.