#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா!! 13 வயதில் நடிகை குஸ்பு எப்படி இருந்துள்ளார் பாருங்க!! வைரலாகும் அவரது புகைப்படம்..
நடிகை குஷ்பு தனது 13 வயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நாயகிகளில் ஒருவர் குஷ்பு. ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு என தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சினிமாவில் பேரும், புகழும் பெற்ற இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான சுந்தர். சி அவர்களை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது சினிமா, அரசியல் என பயங்கர பிசியாக இருந்துவரும் குஷ்பு தனது 13 வயது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தனது 51 வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் குஷ்பு, தனது இளமை கால நினைவை, புகைப்படமாக இணையத்தில் பதிவிட்டுள்ளநிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.