மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏழு பெண்களை ஒரே நேரத்தில் காதலித்த கமலஹாசன்.. ஸ்ரீவித்யா நிலைமைக்கு கமலஹாசன் தான் காரணம்? இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு திடீரென்று உண்மையை கூறிய குட்டி பத்மினி.!
கோலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற நடிகையான ஸ்ரீவித்யா 1970 ஆம் ஆண்டு 'லெட்சுமி வந்தாச்சு' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு ஊரறிந்த ரகசியம், கலாட்டா குடும்பம், உறவுகள் போன்ற பல படங்களில் நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இது போன்ற நிலையில் நடிகை குட்டி பத்மினி ஸ்ரீவித்யா, கமல் காதல் கதை குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை தனது யூ ட்யுப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் குட்டி பத்மினி கூறியதாவது, தமிழில் பழம்பெரும் நடிகையான ஸ்ரீவித்யா கமலஹாசன் உடன் பல படங்களில் நடித்துள்ளார். அப்போது ஸ்ரீவித்யாவுக்கு கமலின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. ஆனால் கமலஹாசன் ஒரே நேரத்தில் ஸ்ரீ சுதா, பாலிவுட் நடிகை ரேகா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா போன்ற ஏழு நடிகைகளை காதலித்து வந்தார். எப்படி ஒரே நேரத்தில் ஒருவரால் ஏழு பெண்களை காதலிக்க முடியும் என்று தெரியவில்லை.
ஆனால் ஸ்ரீ வித்யா கமலை தீவிரமாக காதலித்து வந்தார். கமல் திருமணம் செய்த பிறகு மனமுடைந்து போன ஸ்ரீ வித்யா தனிமையில் தன்னை வருத்தி கொண்டார். இதன் பிறகு திருமண வாழ்க்கையும் அவருக்கு நன்றாக அமையவில்லை முதுகு தண்டில் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்தார் என்று ஸ்ரீ வித்யாவை குறித்து உருக்கத்துடன் வீடியோ வெளியிட்டிருக்கிறார் குட்டி பத்மினி.