திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை லைலாவின் மகன்களா இது எவ்ளோ பெரிய பசங்களா வளர்ந்துட்டாங்க பாருங்க.!
80, 90 இல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை லைலா. விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அஜித், சூர்யா, பிரபுதேவா என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
விக்ரம் நடிப்பில் வெளியான தில், அஜித்துடன் தீனா, சூர்யா நடிப்பில் மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஜீ தமிழ் சானலில் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனது மகன்களோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.