தல அஜித்தை பார்த்தால் ஒன்னு கேட்கணும்! ஏக்கத்தில் நடிகை லைலா!



Actress laila open talks about thala ajith

80, 90 இல்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை லைலா. விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து அஜித், சூர்யா, பிரபுதேவா என அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் வெளியான தில், அஜித்துடன் தீனா, சூர்யா நடிப்பில் மௌனம் பேசியதே “போன்ற ஹிட் திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. கன்னடம்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். லலைலாவிற்கு எந்த திரையுலகிலும் நிலையான அடையாளம் கிடைக்காததால் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு 2006 அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Ajith

என்னதான் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் லைலாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது தல அஜித்துடன் நடித்த தீனா திரைப்படம்தாம். தீனா திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் தல அஜித் பற்றி பேட்டி ஒன்றில் பேசிய நடிகை லைலா நாங்க சேர்ந்து நடிச்ச ‘தீனா’ படத்தில் இருந்துதான் அவருக்கு ‘தல’ன்னு அடைமொழி வந்தது.

 அஜித் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல பிரியாணி சமைச்சுப் போடுவார்னு கேள்விப்பட்டேன்; ஆனா, நான் அவரோட நடிக்கும்போது எனக்கு பிரியாணியெல்லாம் செஞ்சு தரலை. அடுத்து அவரைப் பார்க்கும்போது எனக்கு பிரியாணி செஞ்சு கொடுங்கன்னு கேட்கணும் என்று தெரிவித்துள்ளார்.