ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டாரு விஜய்; போட்டோவை பகிர்ந்து உண்மையை உடைத்த லைலா..!!
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து கூறியிருந்தனர். பல பிரபலங்கள் விஜயுடன் நடித்த சமயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டு வாழ்த்து கூறினர்.
மேலும் பிரபல நடிகையாக வலம் வந்த லைலா விஜய்க்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். உன்னை நினைத்து திரைப்படத்தில் விஜய் மற்றும் லைலா ஜோடியாக நடித்திருந்த நிலையில், அந்த படத்தில் திடீரென விஜய் வெளியேறிய காரணத்தால் சூர்யா அதில் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அவரின் நடிப்பில் வெளியான உன்னை நினைத்து திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அந்த நிகழ்வை குறிப்பிட்டு "விஜய் என்னிடமிருந்து தப்பிவிட்டார்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவர் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.