96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிக்பாஸ் பிரபலத்துக்கு ஜோடியாகும் லட்சுமி மேனன்... யார் அவர் தெரியுமா.? குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். அதனை தொடர்ந்து நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், ரெக்க போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்து வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். பின்னர் உடல் எடை அதிகரிக்கவே சினிமாவில் வாய்ப்பின்றி கிடந்தார். மீண்டும் தனது படிப்பில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜுனன் அவர்களுக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் துவங்கி நடைப்பெற்று வருகிறது. அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.